சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை: ஏழு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
- இந்த வருடத்தில் மட்டும் 112 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டு 22 பேர் மடடுமே கொல்லப்பட்ட நிலையில், இந்த வருடம் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர்- நரயன்பூர் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று காலை போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் போலீசார் ஏழு துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும், துப்பாக்கிச் சண்டை மாலை வரை நீடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இரண்டு உடல்களை போலீசார் மீட்டனர். மாலையில் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டன. மகராஷ்டிரா- சத்தீஸ்கர் இடையில் 6 ஆயிரம் சதுர கி.மீட்டர் அடர்ந்த காடு உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்த காடு அளவிடப்படவில்லை. தெரியாத மலை இந்த பகுதி அழைக்கப்படுகிறது.
இந்த வருடத்தில் இதுவரை 112 மவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச் சண்டையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இது 2023-ம் ஆண்டு மிக அதிகமான எண்ணிக்கையாகும். 2023-ல் 22 மாவோயிஸ்ட்டுகள் மட்டுமே கொல்லப்பட்டனர்.
நரயன்பூர், பாஸ்டர், தன்தேவாடா மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இணைந்து நடத்திய நக்சலைட்டுகளுக்கு இந்த வேட்டையில் 7 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.