இந்தியா
மணிப்பூர் நிலச்சரிவு - ராணுவ அதிகாரி உயிரிழப்புக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி இரங்கல்
- மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.
- இதில் 27 ராணுவ வீரர்களும் அடங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ராய்ப்பூர்:
மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பூபேஷ் பாகல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினென்ட் கர்னல் கபில் தேவ் பாண்டே வீரமரணம் அடைந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவர் கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் தலைமை தாங்கினார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.