சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜனதா
- காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 35 இடங்களில் பின்தங்கியுள்ளது.
- பா.ஜனதா 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் தலா 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. தொடர்ந்து பா.ஜனதா முன்னிலை பெற்றதுடன், ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களையும் தாண்டி முன்னணி பெற்றது. பா.ஜனதா 54 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.