இந்தியா

இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தைக்கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை-அமித்ஷா

Published On 2024-04-09 11:25 GMT   |   Update On 2024-04-09 11:25 GMT
  • பாஜக தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது
  • வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்

அசாம் மாநிலத்தில் லக்கிம்பூரில் பாஜகவின் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு "பை-பை கூறினார். அதை இம்மாநில மக்கள் அதை எப்போதும் மறக்க முடியாது

ஆனால் இப்போது, நமது நிலத்தில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை. டோக்லாமில் கூட, நாங்கள் அவர்களை பின்னுக்குத் தள்ளினோம்

பாஜக தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.

மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசும் இருப்பதால், ஊடுருவல் நின்றுவிட்டது என்று சொல்லலாம். அசாமில் உள்ள முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் மாநிலத்திற்கு அநீதி இழைத்தது" என்று அமித் ஷா தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News