விழிஞம் துறைமுகத்தில் சீனா சரக்கு கப்பல் முதலாவது கப்பலாக நங்கூரமிட்டது
- இம்மாத துவக்கத்தில் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
- முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த துறைமுகத்திற்கு பெயர்சூட்டினார்.
கிரேன்களை சுமந்து வந்த சீன சரக்கு கப்பல் கேரளா மாநிலத்தின் விழிஞம் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. சீனாவை சேர்ந்த ஜென் ஹூவா சரக்கு கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் கிளம்பிய நிலையில், இம்மாத துவக்கத்தில் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
நேற்று கேரளா வந்தடைந்த, சரக்கு கப்பலுக்கு விழஞம் துறைமுகத்தில் வைத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி சர்பனந்தா சொனோவல் கப்பலை வரவேற்க துறைமுகம் வந்திருந்தனர்.
கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த துறைமுகத்திற்கு பெயர்சூட்டினார். பிறகு, இந்த துறைமுகத்திற்கான லச்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது. கேரளா அரசின் கனவு திட்டமாக பார்க்கப்படும் இது, சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு வாயில்கதவுகளை திறக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.