வினாத்தாள் கசிந்ததால் அசாமில், 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு ரத்து
- அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
- அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
கவுகாத்தி:
அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று பொது அறிவியல் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் பொது அறிவியல் வினாத்தாள் திடீரென கசிந்தது. இது தொடர்பாக நேற்று இரவு இடைநிலை கல்வி வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பொது அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி மந்திரி ரனோஜ் பெகு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். போலீசாரின் விரிவான விசாரணையில் வினாத்தாள் கசிவுக்கு யார் காரணம்? அதன் பின்னணியில் யார்-யார் உள்ளனர் என்பது தெரியவரும். வினாத்தாள்கள் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு, தேர்வு நாளின் காலையில் மட்டுமே தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன" என்றார்.