இந்தியா

ம.பி.: சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்

Published On 2023-11-17 05:32 GMT   |   Update On 2023-11-17 05:32 GMT
  • 45 எஸ்.டி, 35 எஸ்.சி. தொகுதிகள் உள்பட 230 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
  • 230 தொகுதிகளில் 2533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 252 பேர் பெண்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 10.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 45 எஸ்.டி, 35 எஸ்.சி. தொகுதிகள் உள்பட 230 தொகுதிகளில் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறாரக்ள். இவர்களில் 252 பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தினர் ஆவார்கள்.

நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் பகுதிகளில் மதியம் 3 மணி வரை தேர்தல் நடைபெறும். மற்ற இடங்களில் மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 64,626 வாக்குச்சவாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் 2,87,82,261 , 2,71,99,586 என மொத்தம் 5,60,58,521 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

Tags:    

Similar News