கேரளாவை அழிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
- வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன.
திருவனந்தபுரம்:
வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் முதல் மந்திரியான பினராயி விஜயன் கட்சி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பேரிடர் நேரத்திலும் மாநிலத்தை அழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மாநிலத்திற்கு மத்திய உதவி விரைவில் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனாலும் அது இன்னும் கிடைக்கவில்லை.
நாங்கள் இன்னும் மையத்தின் உதவிக்காக காத்திருக்கிறோம்.
பேரிடர் நேரத்திலும் மாநிலத்தை அழிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசும், பா.ஜ.க.வும் கடைப்பிடித்துள்ளன என தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தில் நடப்பதை எதிர்க்கட்சிகள் பார்க்க விரும்பவில்லை என காங்கிரசையும் சாடினார்.