அலுவலகத்துக்கு வாருங்கள் அல்லது வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள்: காக்னிசன்ட் அதிரடி
- ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என காக்னிசன்ட் தெரிவித்தது.
- காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின. அதன்பின், படிப்படியாக சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறின.
இந்தியாவிலும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வாரத்தில் சில நாட்கள் வந்து வேலை செய்யும்படியும், மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும்படியும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தன் ஊழியர்களை வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலைசெய்யுமாறு கூறி வருகின்றன.
இதற்கிடையே, காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்ய தேவையில்லை. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கடந்த ஆண்டு தெரிவித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில், காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும், அப்படி வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.