இந்தியா

நீட் தேர்வு விவகாரத்தில் அரசு யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது?: காங்கிரஸ் தாக்கு

Published On 2024-06-20 09:45 GMT   |   Update On 2024-06-20 09:45 GMT
  • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தின.
  • நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பீகாரில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி:

நீட் தேர்வை கடந்த மே 5-ம் தேதி 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் என பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பீகாரில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் கைதான மாணவர் அனுராக் யாதவ் தனக்கு ஒரு மாதத்திற்கு முன் கேள்வித்தாள் கிடைத்ததாகவும், அது தேர்வுத் தாளுடன் 100 சதவீதம் பொருந்தி உள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், மோடி அரசின் கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நீர் தேர்வு விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை என கூறுகிறார். யாரை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

Similar News