இந்தியா

மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பும்: ராகுல் காந்தி

Published On 2024-07-11 09:14 GMT   |   Update On 2024-07-11 09:14 GMT
  • வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன்.
  • துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் ராகுல் காந்தி.

புதுடெல்லி:

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களின் நிலை குறித்து ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிகின்றன. அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.

பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இந்த அவலத்திற்கு முடிவு கட்ட மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News