இந்தியா

கிறிஸ்துமஸ் சீசன் என்பதால் அமலாக்கத்துறை என்னை அழைத்துள்ளது: கார்த்தி சிதம்பரம் கிண்டல்

Published On 2023-12-23 06:31 GMT   |   Update On 2023-12-23 06:31 GMT
  • காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
  • அமலாக்கத் துறை என்னை விசாரணைக்கு அழைப்பது வாடிக்கையாகி வருகிறது என்றார்.

புதுடெல்லி:

கடந்த 2011-ம் ஆண்டில் 263 சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராக கார்த்தி சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இது எனது 20வது நாள். இது வாடிக்கையாகி வருகிறது. அவர்கள் அதே விஷயங்களைக் கேட்கிறார்கள், நான் அதே பதில்களை தருகிறேன்.

இது ஒரு கிடப்பில் உள்ள வழக்கு, முடிந்துவிட்ட வழக்கு. இந்த விஷயத்தை சி.பி.ஐ. பிராக்டிகலாக முடித்துவிட்டது. ஆனால் அதை மீண்டும் திறந்து என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறார்கள். நானும் அதையே மீண்டும் சொல்கிறேன்.

இது கிறிஸ்மஸ் சீசன். அமலாக்கத்துறை என்னை தவறவிட்டது. அதனால் அவர்கள் மீண்டும் என்னை அழைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள இங்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News