இந்தியா

என்.பி.பி. ஆதரவு வாபஸ்: பா.ஜ.க.வின் நாட்கள் எண்ணப்படுகின்றன- காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்

Published On 2024-11-18 02:05 GMT   |   Update On 2024-11-18 02:07 GMT
  • வடகிழக்கு பகுதியியல் இருந்து வாபஸ் பெறுவதற்கான டிரென்ட் தொடங்கியுள்ளது.
  • ஒருநாள் ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தி வரும்.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் பா.ஜ.க. வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உறுதியான முடிவை எடுக்காமல் இருந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க.-வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன என காங்கிரஸ் தலைவர் கன்வார் தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கன்வார் தனிஷ் அலி கூறியதாவது:-

கீழக்கே சூரியன் உதிக்கின்றது. பா.ஜ.க.வின் நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பகுதியியல் இருந்து வாபஸ் பெறுவதற்கான டிரென்ட் தொடங்கியுள்ளது. மணிப்பூர் அரசுக்கு வழங்கி ஆதரவு வழங்கி வந்த அவர்களின் கூட்டணி கட்சி ஒன்று தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

ஒருநாள் ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் ஆதரவை திரும்ப பெற்றதாக சொல்வதை நீங்கள் கேட்பீர்கள். மோடி அரசு கவிழும்.

அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து, அதிகாரத்திற்கு வந்துள்ளனர். ஆனால் இந்த நாள் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மணிப்பூர் நிலை ஒவ்வொருவரின் முன்பும் இருக்கிறது. அவர்கள் எதுவும் செய்யவில்லை 'baanto' and 'kaato' என்ற அரசியலோடு அவர்கள் பிசியாக உள்ளனர்.

ஒருநாள் காலை நீங்கள் எழுந்திருக்கும்போது, யாருடைய ஊன்றுகோளில் பா.ஜ.க. அரசு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தியை கேட்பீர்கள்.

இவ்வாறு கன்வார் தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News