இந்தியா

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

Published On 2024-11-18 01:38 GMT   |   Update On 2024-11-18 01:38 GMT
  • பிரேசில் நாட்டில் 18-19 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
  • சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்திய பிரதமர் மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றாக கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். அங்கு அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டு அதிபருடன் இருநாட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து பிரேசிலுக்கு சென்றடைந்துள்ளார். பிரேசில் நாட்டில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பிரேசில் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். 55 நாடுகளை கொண்ட ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக்கப்பட்டு முதன்முறையாக கலந்து கொள்ள இருக்கிறது.

ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கியுள்ளேன். பல்வேறு உலகத் தலைவர்களோடு உச்சி மாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News