துரோகிகளுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும்: சரத் பவார்
- அஜித் பவார் கோஷ்டியினருக்கு தக்க பதிலடி கொடுக்க சரத் பவார் திட்டம்.
- அவர்களின் இடம் எது என்பதை உணரும் வகையில் பலத்த தோல்வியை மக்கள் கொடுக்க வேணடும்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இந்த நிலையில் சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் சரத் பவார் பேசினார். அப்போது துரோகிகளுக்கு அவர்களுடைய இடத்தை காண்பிக்க வேண்டும். இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறினார்.
இது தொடர்பாக சரத் பவார் பேசும்போது கூறியதாவது:-
1980 தேர்தலில் நம்முடைய கட்சியை சேர்ந்த 58 பேர் வெற்றி பெற்றனர். நான் எதிர்க்கட்சி தலைவரானேன். நான் வெளிநாட்டிற்கு சென்றிருந்தேன். பின்னர் நாடு திரும்பியபோது, முதல்வராக இருந்த ஏ.ஆர். அந்துலே சாகேப் ஏதோ சதித்செயல் செய்துள்ளார் என்பதை உணர்ந்தேன். 58 எம்.எல்.ஏ.-க்களில் 52 பேர் கட்சி தாவினர். நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார்.
அந்த நேரத்தில் நான் ஒன்னும் செய்யவில்லை. மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்தித்தேன். மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்தேன். அடுத்த தேர்தலில் என்னிடம் இருந்து விலகிய 52 பேருக்கு எதிராக இளைஞர்களை களம் இறக்கினேன். என்னை விட்டு விலகிச்சென்ற 52 பேரும் தோற்கடிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா மக்களுக்கு இதற்கான பெருமைப்படுகிறேன். 1967-ல் எனது 27 வயதில் இருந்து எம்.எல்.ஏ.-வாக இருந்து வருகிறேன்.
எனது சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். துரோகம் செய்தவர்களுக்கு அவர்களுடைய இடம் எது என்பதை காண்பிக்க வேண்டும். அவர்கள் தோற்கடிக்க மட்டும் செய்யக்கூடாது. மிகப்பெரிய அவர்களில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து சென்று பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனக்காக்கிக் கொண்டார். இதனால் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்ரேக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.