இந்தியா

சரக்கு ரெயிலின் கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு

Published On 2024-07-02 05:54 GMT   |   Update On 2024-07-02 05:54 GMT
  • கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
  • சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் இருந்து அம்பாலா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது. சரக்கு ரெயில் ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தாரோரி அருகே சென்று கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் விபத்துக்குள்ளானது.

இதில் சரக்கு ரெயிலின் எட்டு கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரெயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டெல்லி-அம்பாலா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கண்டெய்னர்களை அகற்றவும், பாதையின் செயல்பாட்டை மீட்டெடுக்கும் பணிகளில் ரெயில்வே அதிகாரிகள். ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த ரெயில் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. ஆனால் கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News