இந்தியா

மத்திய பிரதேசத்தில் சோகம்: 3 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தம்பதி

Published On 2024-07-02 03:39 GMT   |   Update On 2024-07-02 03:39 GMT
  • வீட்டில் கடிதம் ஏதாவது உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில் கடிதம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
  • தற்கொலைக்கான காரணம் என்ன? இது தற்கொலையா? என விசாரிக்க அலிராஜ்பூரின் துணைப் பிரிவு காவல் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

போபால்:

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவ்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராகேஷ் தோத்வா (27), அவரது மனைவி லலிதா தோத்வா (25) மற்றும் அவர்களது மகன்கள் பிரகாஷ் (7), அக்ஷய் (5) ஆகியோரின் வீட்டின் கூரையில் கயிற்றால் அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. மகள் லக்ஷ்மி (9) தரையில் கிடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வீட்டில் கடிதம் ஏதாவது உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில் கடிதம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனிடையே, இவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? இது தற்கொலையா? என விசாரிக்க அலிராஜ்பூரின் துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDOP) தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News