நாடு முழுக்க 1200-ஐ கடந்த கொரோனா ஜே.என். 1 தொற்று
- 1.1 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்டது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி நாடு முழுக்க கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 840 ஆக இருந்த நிலையில், நேற்று 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் 100-க்கும் கீழ் குறைந்தது. எனினும், கடந்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. புதிதாக உருவாகி இருக்கும் கொரோனா ஜே.என். 1 வகை தொற்று மற்றும் குளிர்காலம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 800-இல் இருந்து 4 ஆயிரத்து 500 ஆக அதிகரித்தது. எனினும், புதிதாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்துள்ளது. புதிய வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பத்து பேர்களில் 1.1 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
புது வகை தொற்று குறித்து சுகாதார துறை வட்டாரங்கள் கூறும் போது, "17 மாநிலங்களில் ஜே.என். 1 வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துவிட்ட போதிலும், இதுகுறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை," என தெரிவிக்கப்பட்டது.