இந்தியா

உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து; 12 பேர் படுகாயம்

Published On 2023-11-13 05:01 GMT   |   Update On 2023-11-13 05:43 GMT
  • தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
  • தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

லக்னோ:

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகளும் ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 26 பட்டாசு கடைகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் 9 பேரின் நிலையை கவலைக்கிடமாக உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News