இந்தியா

கிரிக்கெட் வீரர் முரளீதரன் ரூ.1,400 கோடியில் குளிர்பான தொழிற்சாலை அமைக்கிறார்

Published On 2024-06-19 05:41 GMT   |   Update On 2024-06-19 07:51 GMT
  • திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும்.

பெங்களூரு:

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன். சுழற்பந்து ஜாம்பவானான இவர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.1,400 கோடி முதலீடு செய்ய இருப்பதாக கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் தெரிவித்து உள்ளார்.

இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து மந்திரி பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக முதலில் ரூ.230 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் ரூ.1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ.1,400 கோடியாக உயர்த்தப்படும். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும், முரளீதரன் வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News