மணிப்பூரில் இணைய சேவை தடை தளர்த்தப்பட்டு நாளை பள்ளிகள் திறப்பு
- கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.
மணிப்பூர்:
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தடை தளர்த்தப்பட்டு அங்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.