பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் எகிப்து பயணம்
- இந்தியா-எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை.
- தமது பயணத்தின்போது எகிப்து அதிபரையும், சந்தித்து பேசுகிறார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய முன்முயற்சிகளை கண்டறிதல், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி இரு மந்திரிகளும் விவாதிக்கி உள்ளனர்.
இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் அப்போது கையெழுத்திடப்படும் என கூறப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியையும் தமது பயணத்தின்போது ராஜ்நாத் சிங்கின் சந்தித்து பேசுகிறார்.