இந்தியா

மகனின் 'பிளே ஸ்கூல்' கட்டணமாக ரூ.4.30 லட்சம் செலுத்திய நபர்

Published On 2024-04-20 04:04 GMT   |   Update On 2024-04-20 04:48 GMT
  • பதிவு வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 7,800 லைக்குகளையும் பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
  • கல்வி மிகவும் விலை உயர்ந்துவிட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டார்.

பிளே ஸ்கூல் படிக்கும் தனது மகனுக்கு கட்டணமாக ரூ.4.3 லட்சம் செலுத்தியதாக பட்டய கணக்காளர் ஒருவர் வலைதளத்தில் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் பட்டள கணக்காளராகவும், முழு நேர பங்கு சந்தை வர்த்தகராகவும் உள்ளார். இவர் எக்ஸ் தளத்தில் தனது மகனின் பள்ளி கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, எனது ஒட்டுமொத்த கல்வி செலவை விட எனது மகனின் 'பிளே ஸ்கூல்' கட்டணம் அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார். அதில், ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.10 ஆயிரம், வருடாந்திர கட்டணமாக ரூ.25 ஆயிரம், நான்கு பருவங்களுக்கும் சேர்த்து ரூ.98,750 என தனித்தனியாக குறிப்பிட்டு மொத்தமாக ரூ.4.30 லட்சம் என கட்டணம் உள்ளது.

அவரின் இந்த பதிவு வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 7,800 லைக்குகளையும் பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். கல்வி மிகவும் விலை உயர்ந்துவிட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டார். இதே போல பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட ஆகாஷ்குமாரின் பதிவு இணையத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News