இந்தியா
மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
- மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
- இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறையும் அவரை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியது. மேலும் அமான்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கவுதம் மல்ஹோத்ரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.