இந்தியா (National)

ஏர் இந்தியாவுக்கு ரூ. 90 லட்சம் அபராதம் விதித்த டிஜிசிஏ: காரணம் இதுதான்

Published On 2024-08-23 14:47 GMT   |   Update On 2024-08-23 14:48 GMT
  • ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
  • விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டது.

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தகுதிபெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாயும், விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு விமான நிறுவனங்கள் வழக்கமாக வழங்கும் அறிக்கையின்போது ஏர் இந்தியா நிறுவனம் தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட நிலையில், விமானத்தை தகுதிபெறாத விமானிகளைக் கொண்டு இயக்கியது உறுதியானது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநகரம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் லண்டன் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

Tags:    

Similar News