இந்தியா

அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ்

மெயின்புரி மக்களின் ஆசி என்றும் எங்களுக்கு உண்டு - வேட்புமனு தாக்கல் செய்த முலாயம் மருமகள் பேட்டி

Published On 2022-11-14 16:04 GMT   |   Update On 2022-11-14 16:04 GMT
  • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதி எம்.பி. பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ம் தேதி மரணமடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது.

அந்த மக்களவை தொகுதிக்கும், 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, மெயின்புரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (44), சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், டிம்பிள் யாதவ் தனது கணவர் அகிலேஷ் யாதவுடன் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சிக்கு மெயின்புரி மக்களின் ஆசிகள் என்றும் உண்டு என தெரிவித்தார்.

மாமனார் மறைந்த முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில் அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

Tags:    

Similar News