ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி
- ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தொடரப்பட்டது
- இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது
ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஆகஸ்ட் 18, 2021 அன்று டெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறி பல்வேறு ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்கின்றனர். ஆகவே ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, டெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே அந்த வழக்கின் முடிவு தெரியும் வரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி உந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தள்ளுபடி செய்யப்பட்ட அந்த மனுவில், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை டெல்லி மகளிர் ஆணையத்துடன் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.