இந்தியா
மும்பையில் வீசிய புழுதி புயலால் ராட்சத இரும்பு பேனர் விழுந்து 8 பேர் உயிழப்பு
- புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
- மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு.
இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.