இந்தியா

அதிகாலையில் விபத்து.. மோதிக்கொண்ட சரக்கு ரயில்கள்.. 2 பேர் படுகாயம்

Published On 2024-06-02 06:49 GMT   |   Update On 2024-06-02 06:49 GMT
  • அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
  • இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் இன்று 9ஜூன் 20 அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.




 


அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை சுமார் 3.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த இரேன்ப்து லோக்கோ பைலைட்களுக்கும் பதேர்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் ரஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அம்பலா- ஸ்ரீஹிந் ரயில்வே தடத்தில் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுவதால் மிதமிஞ்சிய போக்குவரத்து நிறைந்த வழித்தடமாக உள்ளது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடம்பத்தால் மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் ரயில்கள்  செல்ல முடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Tags:    

Similar News