இந்தியா

நடத்தை விதிமுறைகள் வாபஸ்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2024-06-06 13:17 GMT   |   Update On 2024-06-06 13:17 GMT
  • தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வென்று 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
  • வரும் 9-ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனையை தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. வரும் 9-ம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News