மத்திய பிரதேசத்தில் 150 இடங்களை தாண்டி பா.ஜனதா அமோகம்
- கடந்த முறை 109 தொகுதிகளை பிடித்திருந்தது.
- தற்போது 150 இடங்களை தாண்டி பிடிக்கும் நிலையில் உள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்யா சிந்தியா 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
தற்போது எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் தேர்தல் பிரசாரம் செய்தது. இருந்தபோதிலும், தேர்தல் முடிவில் அந்த கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா முன்னிலை வகித்தது. நேரம் ஆகஆக பா.ஜனதாவின் முன்னிலை அமோகமாக இருந்தது.
11 மணி நிலவரப்படி 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 46 இடங்கள் அதிகமாக பெறும் நிலையில் உள்ளது. இதனால் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.