ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சண்டை
- பந்திபோரா மாவட்டத்தின் நக்மர்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்.
- பயங்கரவாதிகள் மறைந்து இருக்கும் இடத்தை நெருங்கும்போது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டததில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
பந்திபோரா மாவட்டத்தின் நக்மர்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருந்ததை வீரர்கள் கண்டறிந்தனர். அந்த இடத்தை நெருங்கும்போது பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாகிஸ்தானில் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களை வேட்டையாடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.