இந்தியா

இந்தியாவுக்கு EVM சரிப்பட்டு வராது.. இந்தியா கூட்டணியுடன் கை கோர்த்த ஜெகன்

Published On 2024-06-18 08:35 GMT   |   Update On 2024-06-18 08:35 GMT
  • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

Tags:    

Similar News