மதுபானக் கொள்கை வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனு தள்ளுபடி
- மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்தது.
- சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ஐ சுட்டிக்காட்டி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை டெல்லி மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை அழிப்பதில் சிசோடியா ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக தெரிவித்த நீதிபதி ஸ்வரன காந்தா ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.
மேலும், டெல்லி அரசின் அதிகாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். ஏனெனில் அவர் 18 இலாகாக்களின் பொறுப்பில் இருந்தார் என நீதிபதி தெரிவித்தார்.
ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் வழங்க மணிஷ் சிசோடியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் "விசாரணை நீதிமன்றம் நிபந்தனைகள் அடிப்படையில் உடல்நலம் சரியில்லாத மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது தொடரும்" எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே விசாரணை நீதிமன்றம் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்தது. சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ஐ சுட்டிக்காட்டி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
சிபிஐ கைது செய்த நிலையில் மணிஷ் சிசோடியா துணை முதல்வர் பதவியை பிப்ரவரி 28-ந்தேதி கைது செய்தார்.