இந்தியா

கருத்து கணிப்பு தவறாகிவிட்டதே... விவாதத்தின்போது கதறி அழுத நிர்வாக இயக்குனர்- வீடியோ

Published On 2024-06-04 11:19 GMT   |   Update On 2024-06-04 11:19 GMT
  • பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் கருத்துக் கணிப்பு.
  • 290 முதல் 295 தொகுதிகளை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பெரும்பாலான டிவி சேனல்கள் கருத்துக் கணிப்ப நடத்தும் நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள் பாஜக தலைமயிலான கூட்டணி 450 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்தனர்.

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் (Axis My India) பாஜக கூட்டணி 400 இடங்களை பிடிக்கும என கருத்து கணிப்பில் தெரிவித்திருந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில செய்தி சேனல் இந்தியா டுடே நேரலை விவாதம் நடத்தியது. இதில் ஆக்சிஸ் மை இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா கலந்து கொண்டார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் சற்று அதிகமான முன்னிலை பெற்றது. அதன்பின் இந்தியா கூட்டணி சலைக்காமல் பல இடங்களில் முன்னிலை பெற்றது.

பெரும்பாலான மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. இதனால் கருத்துக் கணிப்பு பொய்யாகியுள்ளது. நேரடி விவாதத்தின்போது கருத்து கணிப்பு குறித்து பிரதீப் குப்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து பதில் அளித்த வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் கருத்து கணிப்பு தவறாகிவிட்டதே... என எண்ணி கதறி அழுதத் தொடங்கிவிட்டார். விவாதத்தை நடத்தியவர் ஆறுதல் கூறிய போதிலும் பிரதீப் குப்தாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News