அரசியலில் குதித்த பிரபல யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜா.. ஆம் ஆத்மியில் ஐக்கியம்
- அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம்
- வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கிறார்.
டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்து 10 ஆண்டுகள் அவரை ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலும் வெற்றிக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரபல யுபிஎஸ்சி ஆசிரியர் அவத் ஓஜா டெல்லியில் கட்சோ ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துள்ளார். அரசியலில் சேர்ந்து கல்விக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்காக கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு ஓஜா நன்றி தெரிவித்தார்.
கல்வி என்பது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தின் ஆன்மாவாக இருக்கும் ஒரு ஊடகம். இன்று, எனது அரசியல் இன்னிங்ஸின் தொடக்கத்தில், நான் அரசியலுக்கும் கல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்யவீர்கள் என்று கேட்டால், அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம் என கூறுவேன் என்று தெரிவித்தார்.
யார் இந்த அவத் ஓஜா ?
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவத் ஓஜா [வயது 40] சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டார். அதற்காக அவரது தந்தை சொந்த நிலத்தை விற்று மகனை டெல்லியில் படிக்கச் வைத்தார். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி ஓஜா வெற்றி பெற்றார்.
ஆனால் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. வேறு வேலைக்கு போக பிடிக்காமல் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியரானார். டெல்லி முகர்ஜி நகரில் சொந்தமாக பயிற்சி மையத்தை தொடங்கினார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார். 2019 இல் புனேவில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை தொடங்கினார்.
வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களில் ஓஜாவின் பயிற்சி வீடியோக்கள், புத்தகங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். யுபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் பிரபாலாக அறியப்பட்ட ஓஜா தற்போது திடீரென அரசியலில் குதித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.