தீவிரமடையும் போராட்டம்: ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
- விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
- அமிர்தசரசில் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர்:
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
அதேநேரம் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள அவர்கள் இதற்காக ஞாயிற்றுக்கிழமை ரெயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்த்சரஸ் நகரில் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல தமிழகத்திலும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
#WATCH | Punjab: Farmers organisations hold 'Rail Roko' protest, in Amritsar. pic.twitter.com/kqmSYjd1z9
— ANI (@ANI) March 10, 2024