இந்தியா
தெலுங்கானாவில் வறட்சியால் பாதிப்பு: நெற்பயிர்களுக்கு தீ வைத்த விவசாயிகள்
- பல மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவி வருகிறது.
- இலந்த குண்டா அடுத்த பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்ட நெற்யிர்களை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
கடும் வறட்சி நிலவிய போதும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்ப டவில்லை. அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவி வருகிறது.
வறட்சி காரணமாக பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் கருகியது. இதனைக் கண்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இலந்த குண்டா அடுத்த பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்ட நெற்யிர்களை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர்.
விவசாயிகள் நெற்பயிர்களை தீயிட்டு கொளுத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.