பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் மட்டுமே பயங்கரவாதத்துக்கு தீர்வு: பரூக் அப்துல்லா
- பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் 3-வது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கதுவாவில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாதவரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என தெரிவித்தார்.