இந்தியா

காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை

Published On 2024-07-09 06:40 GMT   |   Update On 2024-07-09 06:48 GMT
  • பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று அண்டை நாடு நினைத்தால் அது தவறு.
  • அவர்கள் இந்த பாதையில் செல்ல விரும்பினால், பின்விளைவுகளுக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜேகேஎன்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது,

நாட்டின் மீது உலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு ஒரே வழி. இது அமைதிக்கான பாதை அல்ல. அழிவுக்கான பாதை. பயங்கரவாதம் யாருக்கும் உதவாது. பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று அண்டை நாடு நினைத்தால் அது தவறு. அவர்கள் தோல்வி அடைவார்கள்.

இதற்கு பிறகு கோபம் அதிகமாகி ஆக்கிரமிப்பு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பயப்படுகிறேன். அவர்கள் ஏற்கனவே தங்கள் நாட்டை அழித்துவிட்டார்கள். இப்போது ஒரு போர் அதை மேலும் அழிக்கும். இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் துக்கம் அனுசரித்து, பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இந்த பாதையில் செல்ல விரும்பினால், பின்விளைவுகளுக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் கைகோர்த்து செல்ல முடியாது.

அவர்கள் நல்ல உறவுகளை விரும்பினால், அவர்கள் அந்த பாதையில் நடக்க வேண்டும், பயங்கரவாதம் அந்த பாதையில் இல்லை. எனவே பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News