இந்தியா

தேர்தல் ஆணையம் முடிவை வரவேற்கிறேன்: பரூப் அப்துல்லா

Published On 2024-08-16 14:27 GMT   |   Update On 2024-08-16 14:27 GMT
  • தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
  • மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டமன்ற இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதற்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக, ஆகஸ்ட் 20 முதல் 25-ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய அரசின் ஆட்சி அகற்றப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்போது ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் சில மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினார்கள். எனினும் இங்கே தேர்தல் நடத்தவில்லை. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது. இது நடக்கக் கூடாது, நாங்கள் விரும்பும் சமநிலையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்" என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News