இந்தியா

அமெரிக்க துணை அதிபரின் மனைவி சொந்த ஊரான ஆந்திராவில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2024-11-06 14:08 GMT   |   Update On 2024-11-06 14:08 GMT
  • கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
  • துணை அதிபர் என்று அழைக்கலாம் என பெருமிதமாக கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார். அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா கவனம் பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு எதிரான குடியரசுக் கட்சியின் நகர்வாக இது பார்க்கப்பட்டது. உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி பிறந்த ஆந்திர மாநிலத்தின் வட்லூருவில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.



Tags:    

Similar News