null
விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி
- விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
- 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?
விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்
மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.