ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம்: முதியவர் பலி
- கடந்த 150 ஆண்டுகளாக மீன் பிரசாதம் வழங்கி வருகின்றனர்.
- வரிசையில் நின்ற போது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நம் பள்ளியை சேர்ந்த பத்தனி குடும்பத்தினர் ஆஸ்துமா நோயாளிகளுக்காக மிருகசீர கார்த்திகை தினத்தில் கடந்த 150 ஆண்டுகளாக மீன் பிரசாதம் வழங்கி வருகின்றனர்.
தெலுங்கானா, ஆந்திரா மட்டமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான நோயாளிகள் மீன் பிரசாதம் சாப்பிடுவதற்காக தெலுங்கானா வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நம் பள்ளியில் உள்ள சுமேஷ் மைதானத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கானா மந்திரி பொன்னம் பிரபாகர் சபாநாயகர் கதம் பிரசாத் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மீன் பிரசாதத்தை லட்சக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் மைதானத்தில் குவிந்தனர். ஆஸ்துமா நோயாளிகள் மீன் பிரசாதத்தை பெறுவதற்காக வரிசையில் நின்ற போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது நிஜாமாபாத் மாவட்டம்,ஸ்ரீ கொண் டாவை சேர்ந்த ராஜண்ணா என்ற 65 வயது முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் ராஜண்ணாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ராஜண்ணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேகம் பேட்டை போலீசார் குருவையில் முதியவர் இறந்தது சம்பந்தமாக இதுவரை புகார் எதுவும் வராததால் தான் வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.
தெலுங்கானா மந்திரி பொன்னம் பிரபாகர் கூறுகையில், மீன் பிரசாதம் சாப்பிடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் 32 கவுண்டர்கள் திறக்கப்பட்டு மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இன்று காலை 11 மணி வரை சுமார் 6 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டதாக பத்தன குடும்பத்தினர் தெரிவித்தனர்.