இந்தியா

மீனவர்களை மீட்கும் கடலோர காவல்படை

கொச்சி அருகே கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

Published On 2022-06-29 22:56 GMT   |   Update On 2022-06-29 22:56 GMT
  • கடல் சீற்றத்தால் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
  • காணாமல் போன ஒரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கொச்சி:

கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் கடந்த 28ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கடற்சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர்.

இதனிடையே, அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கடலோர காவல்படையினருக்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.  

அந்த மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மேலும் ஒரு மீனவரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

Tags:    

Similar News