இந்தியா

விமானம் ரத்து- உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு வலியுறுத்தல்

Published On 2024-01-03 12:11 GMT   |   Update On 2024-01-03 12:11 GMT
  • விமான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியவை குறித்த வழிகாட்டு.
  • மாற்று விமானத்திற்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிட்ட விமானங்கள் காலதாமதமாக சென்றன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புத்தாண்டு பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல இருந்தனர். அதனைத்தொடர்ந்து விமானம் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நியாயம் வழங்குமாறு விமான நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அறிவுறுத்தினார்.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறும் போது, "இயற்கை சீற்றம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகள் செலுத்திய பணத்தை உடனடியாக திரும்ப செலுத்துவதை பின்பற்ற வேண்டும்" என கூறினார். 

விமானம் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது கால தாமதம் ஆனாலும், விமான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டிருந்தது.

அதில், இயற்கை இடர்பாடுகள் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால், மாற்று விமானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது முழு பணத்தை திரும்ப செலுத்துவதோடு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் மாற்று விமானத்திற்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News