எதிரே வருபவர் தெரியாத அளவிற்கு பனி மூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு
- எதிரே வரும் நபர் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம்.
- வெப்ப நிலை 9.4 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் நிலவியது.
வடஇந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால் விமான சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று காலை டெல்லி விமான நிலையம் மூலம் பயணம் செய்ய இருந்த பயணிகள், விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சேவை குறித்து தெரிந்து கொள்க என டெல்லி விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதேபோல் ஐதராபாத்திலும் கடும் பனி மூட்டம் காரணமாக பெங்களூரில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட்டது.
Cold wave tightens grip on north India, Delhi shivers in dense fog with 'Very Poor' air qualityRead @ANI Story | https://t.co/TPgs5NraQW#cold #fog #northindia #NewDelhi pic.twitter.com/VW8e4DiePw
— ANI Digital (@ani_digital) December 25, 2023