இந்தியா
ஒரு மாதத்தில் 4-வது முறையாக விமான பார்சல் மூலம் அனுப்பப்பட்ட 410 கிராம் தங்கம் பறிமுதல்
- விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
- பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதையடுத்து விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
இதையடுத்து கடத்தல் காரர்கள் விமான பார்சல் மூலம் தங்கம் கடத்த தொடங்கினர். அதனையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதனை அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது, அதில் பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு விமான பார்சல் மூலம் தங்கம் கடத்தி வர முயன்றது இது 4-வது முறையாகும்.