இந்தியா (National)
null

பீகார் முதல் இமாச்சலப் பிரதேசம் வரை.. இதுவரை வாக்களித்த முக்கிய பிரபலங்கள்

Published On 2024-06-01 05:19 GMT   |   Update On 2024-06-01 05:27 GMT
  • இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க நமக்கு அனைவரின் பங்களிப்பும் தேவை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
  • மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சலப் பிரதேசம் ஹிராம்பூரில் தனது வாக்கினை செலுத்தினார்.

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 7 ஆம் கட்டமும் கடைசி கட்டமுமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும்.

இன்றைய தேர்தலில் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும் , சண்டிகார் யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மக்களும் பிரபலங்களும் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்.ஜே.டி கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி மகளுடன் காலையிலேயே வாக்களித்த நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பாட்னவில் உள்ள வாக்குச்சாவடியில் தற்போது தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு ஜனநாயகத் திருவிழா, பிகார் மக்கள் வாக்களிக்க தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க நமக்கு அனைவரின் பங்களிப்பும் தேவை என்று தெரிவித்தார். மேலும் பீகாரில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மூத்த தலைவர் ராஜேந்திர பிரசாத் பட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அங்கு தனது வாக்கினை செலுத்தினார். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சலப் பிரதேசம் ஹிராம்பூரில் தனது வாக்கினை செலுத்தினார்.

பஞ்சாபில் 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். 

Tags:    

Similar News