இந்தியா

பிக்பாக்கெட் கும்பல்: அஜித் பவார் கட்சியை கடுமையாக விமர்சித்த சரத்பவார் கட்சி தலைவர்

Published On 2024-11-04 02:53 GMT   |   Update On 2024-11-04 02:53 GMT
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரைச் சார்ந்தது? சரத் பவரை சார்ந்தது.
  • ஒருநாள், அஜித் பவார் வந்தார். அவர் சரத்பவாரை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவருடைய கடிகாரம் சின்னத்தை பறித்துக் கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து ஏக்நாத் ஷிண்டே அந்த கட்கியை தனக்காக்கி கொண்டார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல் சரத்பவாரின் தேசியவாத கட்சியை பிரித்தது மட்டுமல்லாமல் அந்த கட்சியை தனக்காக்கி கொண்டார் அஜித் பவார். கட்சி மற்றும் கட்சி சின்னம் கடிகாரம் இரண்டும் அவரது பக்கம் உள்ளது. ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக உள்ளார்.

இதனால் இரண்டு கட்சிகளிலும் கட்சியை பிரித்துச் சென்றவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு பிரிந்து சென்றவர்களும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த வகையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை-கல்வா தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து போட்டியிட்டு வருபவர் ஜிநே்திர அவாத், அஜித் பவார் கட்சியை பிக்பாக்கெட் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஜிதேந்திர அவாத் இது தொடர்பாக கூறும்போது "தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரைச் சார்ந்தது? சரத் பவரை சார்ந்தது. ஒருநாள், அஜித் பவார் வந்தார். அவர் சரத்பவாரை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவருடைய கடிகாரம் சின்னத்தை பறித்துக் கொண்டார். இது பிக்பாக்கெட் கும்பல். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், தைரியம் உள்ளவராக இருந்தால், நீங்கள் வெறு சின்னத்தில் நின்று போட்டியிட்டிருக்க வேண்டும்" என்றார்.

இந்த நிலையில் ஜிதேந்திர அவாத் விமர்சனத்திற்கு அஜித் பவார் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுராஜ் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார் "ஜிதேந்திர அவாத் மனநிலை தொடர்பாக பாதிப்பு அடைந்துள்ளார். அவருடைய தோல்வியை அவர் பார்கக் முடியும் என நினைக்கிறேன். அவருடைய சிகிச்சைக்கு நாங்கள் நிதி அளிக்க தயாராக இருக்கும். இதன் மூலம் அவர் விளம்பர தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

கடிகாரம் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இரு கட்சிகள் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடிகாரம் சின்னத்தை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Tags:    

Similar News